பொங்கல் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது நாம் அறுவடை செய்த புதுநெல்லை சூரிய பகவானுக்கு படைத்து நம் காணிக்கையை செலுத்தி, அதில் பொங்கல் வைத்து அனைவருக்கு கொடுத்து நம் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு. அது மட்டுமின்றி அடுத்த நாள் ஜல்லிகட்டு என அசத்துவார்கள் தமிழர்கள், ஆனால், இவை அனைத்தும் நடப்பது நம் கிராம புரங்களில் தான். நகரங்கள் இதை மிகவும் மிஸ் செய்கின்றன. அந்த வகையில் கிராமத்து ஹீரோவாக நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கலக்கிய படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்தராமன் இயக்கத்தில் கிராமத்து இளைஞனாக கலக்கிய படம் முரட்டுகாளை தான். இப்படத்தின் வரும் மாடு அடக்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது. இதில் படம் முழுக்க வேஷ்டி, சட்டையுடம் கோபக்கார இளைஞனாக ரஜினி அனைத்து வகை ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார்.
கமல்
கமல் எந்த கதாபாத்திரம் செய்தாலும் அந்த கேரட்ராகவே மாறி விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சகலகல வல்லவன் படத்தின் முதல் பகுதி கிராமத்து இளைஞன் பின் இரண்டாம் பாதியில் சிட்டி பாய் என கலக்கியிருப்பார். இதை விட விருமாண்டி படத்தின் இவர் எடுத்திருந்த காளை அடக்கும் காட்சி இதுவரையிலான அனைத்து தமிழ் சினிமாவிலும் இது தான் மிகவும் யதார்த்தமாக படமாக்கப்பட்டவை.
அஜித்
அஜித் என்றாலே கோட், துப்பாக்கி, சன் கிளாஸ் என்று கலக்குபவர் அப்படியிருக்க தன்னை வேறு தளத்தில் காட்ட வேண்டும் என்பதற்காகவே முதன் முதலாக படம் முழுவதும் வேஷ்டி சட்டையில் கலக்கிய படம் வீரம். இப்படத்தின் மூலம் அஜித்திற்கு கிராமத்து ஆடியன்ஸ் அதிகமாகின என்றால் மிகையல்ல.
விஜய்
விஜய்யின் பெரும்பாலான படங்கள் சி செண்டர் ஆடியன்ஸை கவர் செய்வது போல் தான் இருக்கும். அதே போல் இவர் நடிப்பில் மிகவும் ரசிகர்களால் கவர்ந்த படம் திருப்பாச்சி, வேலாயுதம். இந்த இரண்டு படங்களில் தன் தங்கையின் மீது வைத்திருக்கும் பாசத்தை கிராமத்து இளைஞனாக மிக அழகாக பிரபலித்திருப்பார்.
சூர்யா
சூர்யா என்றாலே செம்ம ஹாண்ட்சம் ஹீரோ. ஆனால், இவர் முதன் முதலாக வேல் படத்தின் மூலம் கிராமத்து இளைஞனாக கலக்கியிருப்பார். ஹரி படம் என்றாலே பாசம், குடும்பம் என அனைத்தும் இருக்கும். இதற்கு எந்த வகையிலும் குறையில்லாமல் கிராமத்து பெரிய குடும்ப பையனாக சூர்யா வாழ்ந்திருப்பார்.
கார்த்தி
கார்த்தி என்றாலே இன்னும் 10 வருடம் சென்றாலும் நம் நினைவிற்கு வருவது இவர் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன். இதில் பருத்திவீரனாக ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை மிரட்டியிருப்பார்.
தனுஷ்
தனுஷ் எப்போதும் சென்னை லோக்கல் பையனாக தான் நடித்து பார்த்திருப்போம். ஆனால், மதுரை கிராமத்து இளைஞனாக, அதிலும் சேவச்சண்டை விடும் துறு துறு பையனாக ஆடுகளம் படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தின் உச்சத்தை அடைந்தார். இப்படம் இவருக்கு தமிழக கிராமங்களில் உள்ள பல இளைஞர்களை ரசிகர்களாக்கியது. அந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்றார்.
விக்ரம்
விக்ரம் என்றாலே நடிப்பு என்று தான் அர்த்தம். இவர் மிகவும் ஸ்டையிலான ஆள். இருப்பினும் இவரது நடிப்பில் படம் முழுவது வேஷ்டி, கைலி, கலர் கலர் சட்டை அணிந்து கலக்கிய படம் மஜா. இப்படத்தில் திருடும் இளைஞானாக தோன்றி இறுதியில் நம் மனதை திருடி விடுவார்.
எது எப்படியோ..கிராமத்து ஹீரோக்களை பார்த்துவிட்டோம், அதேபோல் நம் கிராமத்து சொந்தங்களை பார்க்க கிளம்புவோம்..அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment