↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழர்களின் சாதனை நாளுக்கு நாள் உலகம் அறிந்து வருகிறது. அந்த வகையில் தேசியக் கொடியையும் கௌரவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ரோட்டரி மாவட்டம் 3230. 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் திரண்டு நின்று மனிதர்களால் ஆன உலகின் மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்க உள்ளது. டிசம்பர் 7-ந் தேதி ஒட்டுமொத்த உலகநாடுகளும் இந்தியாவை உற்றுநோக்க உள்ளன.
அன்றுதான், " என்கொடி, என் இந்தியா" என்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நடத்தக் காட்ட உள்ளது ரோட்டரி மாவட்டம் 3230. இதற்கு பக்கபலமாக நிற்க உள்ளது க்வாண்டா - ஜி என்ற நிறுவனம். 50 ஆயிரம் பேர் ஒன்று திரண்டு ஒரு தேசியக்கொடியை உருவாக்குவது என்பது கின்னஸ் சாதனையாகும்.
எனவே அன்றைய தினம், இந்த சாதனை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், பல சினிமா நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment