↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளில், நாயகனுக்கும், நாயகிக்கும் சரியான 'கெமிஸ்ட்ரி' இருந்தால்தான், அப்படிப்பட்ட காட்சிகளை ரசிக்க
முடியும். யாராவது ஒருவர் ஈடுபாட்டுடன் நடிக்கவில்லையென்றாலும், மொத்தக் காட்சியும் வீணாகப் போய்விடும்.ஆனால், இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயமில்லை என்கிறார் தமன்னா.
“காதல் காட்சிகளில் நடிப்பது சங்கடமான விஷயம்தான்.காதல் காட்சிகளை மிகவும் 'இன்டிமசி' ஆக இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அம்மாதிரியான காட்சிகளை ரசிப்பதற்குத்தான், திரையரங்கிற்கு ரசிகர்கள் வருகிறார்கள்.ஆனால், காதல் காட்சிகளில் நடிப்பது எளிதல்ல.
காதல் காட்சிகளில் நடிக்கும்போது, ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையே சரியான கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும். அவர்களும், ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும். நிஜமாகவே, அப்படித்தான் நடிக்கிறார்களோ என பலர் நினைப்பார்கள். நம்மைச்சுற்றி, பலர் நின்று கொண்டிருக்க, எரியும் விளக்குகளால் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, இயக்குனரோ,இன்னும் நல்லா நடிங்க, நல்லா நடிங்க என சொல்லும்போது, எப்படி நடிக்க முடியும். அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும் போது சீக்கிரம் இந்தக்காட்சியை எடுத்து முடிக்கமாட்டார்களா என்றே தோன்றும்,” எனத்தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், அதையும்மீறி, நட்சத்திரங்கள் பொருத்தமாக நடிக்கும்போதுதான் நமக்கும் படத்தை ரசிக்கத்தோன்றும். நடிப்புதான் என்றாலும் சில காட்சிகளில் நடிக்கும்போது அனைவருக்கும் சங்கடமாகத் தோன்றுவது வழக்கம்தானே...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment