↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடிகைகள் தோழிகளாக இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. கீரியும் பாம்புமாக இருந்த திரிஷா-நயன்தாரா சமீபத்தில் நெருங்கிய தோழிகள் ஆகி இருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் துணிச்சலாக விமர்சனம் செய்யும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவரிடம் ஹீரோ, ஹீரோயின் இருதரப்புமே எச்சரிக்கையுடனே பழகி வருகின்றனர். அவரிடம் மனம்விட்டு பேசுவதற்குகூட சில ஹீரோ, ஹீரோயின்கள் பயப்படுகின்றனர். யார் நடித்த படமாக இருந்தாலும் அதில் பிடிக்காத காட்சிகள், பெண்ணை இழிவுபடுத்துவதுபோல் காட்சிகள் இடம்பெற்றால் அதை பகிரங்கமாக தனது இணைய தள பக்கத்தில் சமந்தா கண்டிப்பதே இந்த பயத்துக்கு காரணம். இவருக்கும் நெருக்கமான ஒரு தோழி கிடைத்திருக்கிறார்.

அவர் வேறுயாருமல்ல பின்னணி பாடகி சின்மயிதான். சமீபத்தில் சின்மயி தனது கணவர் ரகுல் ரவீந்திரனுடன் பார்ட்டிக்கு சென்றிருந்தார். அதில் சமந்தாவும் பங்கேற்க வந்தார். சின்மயியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த சமந்தா அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பிறகு அந்த புகைப்படங்களை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு ஒவ்வொரு படத்துக்கும் கமென்ட் போட்டிருக்கிறார். சின்மயி எனது சகோதரி போன்றவர் என குறிப்பிட்டிருக்கிறார். ரகுலும் சமந்தாவுக்கு நண்பர்தான். ஏற்கனவே அவருடன் ‘மாஸ்கோவின் காவிரி' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சமந்தா. 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top