↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்' என்ற படம் உருவாகிறது. வீரா இயக்குகிறார். வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத் ஜோடி. கே.என்.ரவிசங்கர் தயாரிக்கிறார். படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தபோது பலர் தங்கள் அனுபவங்களை கூறினார்கள். ஒரு சிலர் சினிமாவுக்குள் பிரவேசிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதை சொல்லி சென்டி மென்ட்டாக பேசினார்கள்.
அடுத்து பேச வந்த சிறப்பு அழைப்பாளர் விஜய் சேதுபதி,‘ சினிமாவில் நுழைவதற்காகவும், தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காகவும் கஷ்டப்பட்டு வேலை செய்தேன் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. யார்தான் கஷ்டப்படவில்லை. எல்லா வேலையிலும் கஷ்டம் இருக்கு.
அதை அவர்கள் சொல்றதுக்கு வாய்ப்பில்லை. கஷ்டமாக இருந்தாலும் வேலை செய்துவிட்டு போவோம். அதை ஏன் வெளியில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்' என்றார். கஷ்டத்தை பற்றி பேசியவர்கள் முகத்தில் உஷ்ணம் தெரிந்தது. அதை கவனித்த விஜய் சேதுபதி ‘படத்தோட டைட்டில் நல்லா இருக்கு. திறமையான யூனிட் இது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு'னு சொல்லி உர்ரான யூனிட் காரங்களை கூல்படுத்த முயன்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment