இயக்குனர் ஷங்கர் வாங்கி வெளியிடும் ‘கப்பல்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.
வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘கப்பல்’ படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தை மிகவும் பாராட்டினார்களாம்.
படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாகவே தயாரிக்கப்பட்டிருப்பதால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற எண்ணத்திலேயே படத் தயாரிப்பை சில வருடங்களாக மூட்டை கட்டி வைத்திருந்த இயக்குநர் ஷங்கரே முன் வந்து இந்தப் படத்தை தனது ‘எஸ் பிக்சர்ஸின்’ மூலமாக வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கப்பல்’ படம் இந்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. வருடக் கடைசியில் ஒரு கொண்டாட்டம் என்று சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment