↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ஹாபி இருக்கும் அதில் சிம்பு, ஆர்யாவுக்கு ஹாபி என்னவென்று அனைவரும் அறிந்த விஷயம்தான், ஆர்யா இதில் அடக்கமான முறையை கையாண்டாலும், சிம்பு மட்டும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நமக்கு எதுக்கு வம்பு என்று சிம்பு ஒதுங்கி போனாலும் பிரச்சனையும், கிசு கிசுவும் அவரை விடுவதாக இல்லை, இதில் முதலில் நயன்தாரா காதல், பின் ஹன்சிகா காதல் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் முத்தக்காட்சியுடன் மக்களிடையே தொடர்பில் இருக்கிறார்.
நயன்தாராவும் இதேபோல் தான் பலமுறை சர்ச்சையில் சிக்கி பந்தாடப்பட்டிருக்கிறார் மீடியாக்களிடம். நடன இயக்குநர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரைக்கும் சென்ற இவர்களின் பந்தம் நயன்தாரா பிரபுதேவா பெயரை பச்சைக் குத்தி கொள்ளும் அளவுக்கு தூய்மையான காதலாக இருந்தது, ஆனால் இடையில் புகுந்த சில மீடியேட்டர்கள் இவர்களின் காதலில் அனுகுண்டை கொளுத்திப்போட்டு காதலுக்கு சங்கு ஊதினார்கள். பின் இந்த காதலும் வேண்டாம் என்று மீண்டும் சினிமாவுக்கு வந்தவரை ஆர்யா அதரவு கரம் நீட்டி ராஜா ராணி படத்தில் நடிக்க வைத்தார். இவரின் இரண்டாம் இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க தற்போது நயன்தாராவை அடிக்கடி ஒன்று உருத்திக் கொண்டேயிருக்கிறதாம், அது அவரின் கையில் இருக்கு பிரபு என்ற பெயர்.
இந்த பெயரை எப்படி அழிப்பது என்று யோசித்து யோசித்து பச்சை குத்தி நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்று அவரின் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி புலம்புகிறாராம். இதனால் உடனே பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம்.
அப்ப அடுத்த பெயரை பச்ச குத்திக்க அம்மணி தயாராகுறாங்களோ..!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top