அஞ்சான் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்.அந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் சுமார் இரண்டு கோடி.
அவ்வளவு பெரிய சம்பளக்காரரை வைத்துக் கொள்ளும் எண்ணமே இல்லாத லிங்குசாமியை, வலுக்கட்டாயமாக வற்புறுத்திதான் சந்தோஷ் சிவனுடன் கோர்த்துவிட்டார் சூர்யா. அதுவும் எப்படி தெரியுமா? லிங்கு எங்க இருக்கீங்க? உடனே வர முடியுமா என்று ஒரு ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்திருக்கிறார். என்னவோ ஏதோ என்று அலறிக் கொண்டு வந்து சேர்ந்தார் லிங்கு. வந்த இடத்தில் சூர்யாவும், சந்தோஷ் சிவனும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். இவர்தான் நம்ம படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணப்போறார் என்று கிட்டதட்ட உறுதிபடுத்திவிட்டார் சூர்யா.
அதற்கப்புறம் வேண்டாம் என்று சொல்ல முடியாதே? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெண்டு கோடி சம்பளம் என்று கூறிவிட்டார் சந்தோஷ் சிவனும். இப்படிதான் சிக்கினார் லிங்குசாமி. கட்...
இப்போது அஞ்சானின் தோல்வி, தனது சொந்தப்படமான மாஸ் படத்தை சேதப்படுத்தும் என்று திடீர் அச்சம் வந்துவிட்டதாம் சூர்யாவுக்கு. எல்லா செலவுகளையும் பாதியா குறைங்க என்று கூறிவிட்டாராம். வேறொருத்தர் தயாரிச்சா ரெண்டு கோடி கேமிராமேன் வேணும். சொந்தப்படம் என்றால் அவ்வளவு பெரிய கேமிராமேன் வேணாம். அப்படிதானே? என்று முணுமுணுக்கிறது அஞ்சான் வட்டாரம்

0 comments:
Post a Comment