வித்தியாச வேடங்களாக தேடித் தேடி நடிப்பவர், விஜய் சேதுபதி. ‘இப்படித்தான் நடிப்பேன்னு கிடையாது; என் கேரக்டர் நல்லா இருந்தா எப்படி வேணும்னாலும் நடிப்பேன்’ என்பது அவருடைய பாலிசி. குறைந்த பட்ஜெட், நிறைந்த லாபம் என்பதுதான் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து போடும் கணக்கு. இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த புதுப் படத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
அதெல்லாம் சரி... கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர், இப்போதுதான் காசு பார்க்க ஆரம்பித்திருக்கிறார். விஜய், அஜித்... என சினிமா பிரபலங்கள் எல்லோருக்கும் வந்த ஆசை, இப்போது விஜய் சேதுபதிக்கும் வந்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் இடம் வாங்கி, பங்களா கட்ட வேண்டும் என்பதுதான் அது. அதற்காக நல்ல இடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஈசிஆரில் இடம் வைத்திருப்பவர்கள் விஜய் சேதுபதியை அணுகலாம்.
0 comments:
Post a Comment