தமிழ் சினிமாவை அட்டை பூச்சி போல மெல்ல மெல்ல ரத்தத்தை உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறது திருட்டு விசிடி. இன்று படம் ரிலீஸ் ஆனால் அதை நாளை சிடியாக கடைகளில் பார்க்க முடிகிறது. இந்த வேகத்தை வேற ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்கு காட்டியிருந்தா கூட இந்த நேரத்துக்கு இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்திருக்குமோ என்னவோ?,
சமீபத்தில் நடிகர் விஷால் திடீரென சிடி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி கத்தி மற்றும் பூஜை படத்தின் சிடிக்களை பறிமுதல் செய்தார். மேலும் அந்த கடைக்காரரை போலீசிடம் ஒப்படத்தது பெருமைக்குரிய விஷயமாகும். திரையில் வீர வசனம் பேசி நிஜத்தில் ஓடி ஒளியும் ஹிரோ நமக்கு தேவையில்லை. சினிமா வளர எந்த நடிகன் பாடுபடுகிறானோ அவனே நல்ல கலைஞன் என்று பெயரை எடுத்துவிட்டார் விஷால். விஷாலின் இந்த அதிரடி நடவடிக்கை கேள்விப்பட்ட விஜய், அவரை பாராட்டியுள்ளார். இது குறித்து விஜய் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “விஷாலை நினைத்தால் பெருமையாகவுள்ளது, அதிரடி ஆக்ஷன் தான் குற்றவாளிகளிடம் பேசும் என்பதை நிரூபித்துவிடாய், திருட்டு விசிடி ஒழிக்க பாடுபடுவோம்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு விஷாலும் பதில் அளித்துள்ளார் ”அன்பிற்குரிய விஜய், உங்கள் ஆதரவு எனக்கு கிடைத்ததற்கு நன்றி, இதுமாதிரியான செயல்களால் நிச்சயமாக ஒரு நல்ல மாற்றம் உண்டாகும், திருட்டு விசிடி ஒழிக்க பாடுபடுவோம்” என்று பதில் கூறியிருக்கிறார் விஷால். திருட்டு விசிடி ஒழிப்பு சம்பந்தமாக நவம்பர் 16ம் தேதி அனைத்து சங்கங்களும் ஒரு நாள் ஸ்ட்ரைக் செய்யவுள்ளார்கள். நவம்பர் 16ம் தேதி மதியம் 1 மணியளவில் திருட்டு விசிடி ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
0 comments:
Post a Comment