விஜய், சமந்தா நடிப்பில் உருவான கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
கத்தி படம் வசூல் சாதனை செய்து வருவதால் தெலுங்கில் ரிலீஸ் செய்ய டப்பிங் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர், படத்தை ரீமேக் செய்து வெளியிட்டால் நன்றாக சம்பாதித்துவிடலாம் என கனவு கண்டார். ஆனால் தற்போது அந்த கனவு பகல் கனவாகிவிட்டதாம்.
இந்த கதைக்கு பவன் கால்யாண் தான் பொருத்தமாக இருப்பார் என்று இந்த படத்தை போட்டு காட்டினார். படத்தை பார்த்த பவன் கால்யாண் கத்தி படம் அருமையாக இருக்கிறது. ஆனால் இந்த கதாபாத்திரம் தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று சொல்லிவிட்டாராம்.
அதனால், வேறு வழியில்லாமல் தற்போது படத்தை டப்பிங் செய்து மட்டுமே வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்..
0 comments:
Post a Comment