விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான கத்தி படம் அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெற்றி பாதையில் செல்வதற்கு படத்தின் பின்னணி இசையும் முக்கிய காரணமாகும். எனவே, இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கு விஜய், ஃபியானோ ஒன்னை பரிசாக வழங்கினார்.
100கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்படும் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை தாகூர் மது பெருந்தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார். டப்பிங் வேலை துவங்கி நடந்து வருகிறதாம்.
கத்தி படத்தின் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் விஜய் அதற்கு விரும்பம் தெரிவிக்கவில்லையாம். இந்த தகவலை கத்தி தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment