↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ்த் திரையுலகில் மும்பை சினிமாவைப் போல் பார்ட்டி கலாச்சாரம் நிறையவே பரவிவிட்டது. முன்பெல்லாம் சினிமாவைத் தவிர திரைக்கு மறைவில் நடக்கும் பல்வேறு விஷயங்களைப் பற்றி ரசிகர்கள் ஓரளவிற்கே தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். அவர்கள் ரசிக்கும் அதிக பட்ச கிசுகிசுவாக இருப்பது யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள மட்டுமே இருக்கும். 

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்கள் வந்த பின் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளே அவர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், பார்ட்டிகள் ஆகியவற்றைப் பற்றிய புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கின்றனர். அப்படிப்பட்ட புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருவதுதான் ஆச்சரியம்.


அதனால், அம்மாதிரியான விஷயங்களைத் தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் தானாகவே தள்ளப்படுகிறார்கள். ‘பார்ட்டி’ நடப்பதன் காரணம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வற்காகவும், நட்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் என்று சொல்லப்பட்டாலும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பலருக்குப் பயன்படுகிறது என்கிறார்கள். 

அப்படித்தான் சமீபத்தில் வெளியான ஒரு பார்ட்டி புகைப்படத்தைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இப்போது அந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்து புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். நடிக்க வந்து இத்தனை வருடங்கள் ஆன பின் அந்த ஜோடி இப்போதுதான் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகிறார்கள். அந்த ஜோடியின் பெயர்களுக்குள் ‘ஷ’ என்ற ஒரு ஒற்றுமை இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top