↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சிறையில் இருந்து வீடு திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனுக்கு வரவேற்று ரஜினிகாந்த் கடிதம் எழுதியது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 22 நாட்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். அவரை வரவேற்க பெங்களூரில் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். சென்னை வந்த அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
மதிப்பிற்குரிய ஜெயலலிதாஜி, உங்களை மீண்டும் போயஸ் கார்டனில் பார்ப்பதில் மகிழ்ச்சி என்று ரஜினி தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஜெயலலிதா மீது கட்சியினர் தவிர பிரபலங்களும் அன்பு வைத்துள்ளதுனர் என்று ரஜினியின் கடிதத்தை பார்த்த அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
ரஜினியை எப்படியாவது தங்கள் கட்சியில் சேர்க்க அதீத முயற்சி செய்து வரும் பாஜகவுக்கு இந்த கடிதம் அதிர்ச்சி அளித்துள்ளது.
அரசியலுக்கு வர மாட்டேன் என்பதையே ரஜினி இந்த கடிதம் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஜினியை பாஜகவுக்கு வருமாறு நாங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எங்களின் அழைப்பை ஏற்பது சந்தேகம் தான். தமிழகத்தில் எங்கள் கட்சியின் நிலைமையை மேம்படுத்த இனியும் நாங்கள் ரஜினியை நம்ப முடியாது என்பதையே இந்த கடிதம் தெரிவித்துள்ளது என தமிழக பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Home
»
bjp
»
cinema
»
cinema.tamil
»
jeyalalitha
»
news
»
news.india
»
rajini
» ரஜினி மீது கடுங்கோபத்தில் பா.ஜ.க! காரணம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment