வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது.
உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் நீண்ட நாட்கள் வரை புளிக்காது.
மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
0 comments:
Post a Comment