குழந்தை பருவம், இளமை பருவம் என தேர்வு அறையில் மற்றொருவரை பார்த்து காப்பி அடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், இப்போது குழந்தை பருவம், இளமை பருவம் என வேடம் இட்டு நடிக்கும் நடிகர்களும் மற்ற நடிகர்களை காப்பி அடித்து வருகின்றனர்.
‘தல’ என்று செல்லமாக அழைத்துவரும் நடிகர் அஜித், அவர் தான் நடித்துவரும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்புகளின் இறுதியில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார், அதுவும் தன் சொந்த செலவில்.
இவரைத் தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய் அவர்களும் இதுபோல் தான் நடித்துவந்த படங்களின் இறுதி நாள் அன்று படக்குழுவினருக்கு விருந்து அல்லது பரிசு போன்று கொடுத்து வருகிறார். மேலும் பல பண்டிகைகளிலும் இது போலான விருந்து உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை போல் தனுஷ்-ம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் “மாரி” என்ற படத்தில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் இனிதாக முடிவடைய, இவரும் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார்.
0 comments:
Post a Comment