↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான்.

ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
* பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.
* பொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.
* நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.
* சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர். வேறு என்ன காரணங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top