இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்த மகிந்த ராஜபக்ச, தான் தோல்வியடைய இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான றோ அமைப்பே காரணம் தெரிவித்திருந்தார்.
இந்த நேர்காணல் வெளியானதை அடுத்து, இந்திய பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையிலான சந்திப்பை இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இரத்துச் செய்தனர்.
எனினும் அந்த சந்திப்பை இரத்துச் செய்ய வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்சவுக்கு தான் விசேட செய்தி ஒன்றை கொடுக்கவிருப்பதாகவும் இந்திய பிரதமர், உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதனடிப்படையிலேயே மகிந்தவுக்கும் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி றோ புலனாய்வு அமைப்பு தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்துக்கு, இந்திய பிரதமர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய இந்திய பிரதமர்,
நாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவானது, அந்த நாட்டுக்கு தேவையான அங்கம், றோ அமைப்பு மீது குற்றம் சுமத்துவது என்பது இந்திய மீது குற்றம் சுமத்துவதற்கு ஈடானது.
றோ அமைப்பானது இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய கிளையாகும். எனக்கு அதற்கான பொறுப்பு உள்ளது. எனக்கு அந்த அமைப்புடன் தொடர்பில்லை என்று கூறி என்னை சமாளிக்க முயற்சிக்க வேண்டாம்.
நாடுகளின் புலனாய்வு பிரிவுகளுக்கும் ராஜதந்திரத்திற்கும் இடையிலான தொடர்புகளை அனுபவமுள்ள அரசியல்வாதியான உங்ளால் புரிந்து கொள்ள முடியாது என்றால், நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம்.
அப்படி அரசியலில் ஈடுபடுவது நீங்கள் உங்கள் நாட்டுக்கு செய்யும் பாரிய சேதம் என இந்திய பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.
இந்திய பிரதமரின் உபதேசத்தை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி தன்னிடம் இருந்து விடைபெறும் முன், சிரித்த முகத்துடன் அவருக்கு கைலாகு கொடுத்த இந்திய பிரதமர், மகிந்தவின் இருப்பு இந்தியாவிடமே உள்ளது. அதனை நினைவில் வைத்து கொண்டு வேலை செய்யுங்கள் என கூறியுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment