கெளதம்மேனனின் பேவரைட் ஹீரோவாக இருந்தவர் சூர்யா. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ஹிட் படங்களை கொடுத்த அவர்கள், துருவநட்சத்திரம் படத்திலும் இணைய இருந்தனர். ஆனால், சிங்கம் படத்தில் நடித்திருந்த சூர்யா, அதே வேகத்தில் அதே ஆக்சனில் எனது அடுத்த படமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று சொன்னவர், கெளதம் மேனன் சொன்ன கதையில் சிலபல திருத்தங்களை செய்யச் சொன்னாராம்.
ஆனால் அதற்கு முன்புவரை சூர்யாவிடம் கதையே சொல்லாமல் படம் பண்ணிய கெளதம்மேனன், தன்னிடம் அவர் துருவ நட்சத்திரம் கதையை துருவி துருவி கேட்டதால், டென்சனாகி விட்டாராம். இதுக்கு மேல கதையில் மாற்றம் செய்வதாக இல்லை என்று சற்று தூக்கலான குரலில் சொல்லி, அதற்கு மேல் அவரிடம் பேச விரும்பாமல் நண்பர்களாக இருந்தோம், நண்பர்களாகவே பிரிவோம் என்று கைகுலுக்கி விட்டு விடைகொடுத்தார்.
இதையடுத்து தற்போது அவர், விக்ரமை வைத்து ஒரு அதிரடி படத்தை இயக்கப்போகிறார். ஆனால், அந்த படம் அவர் ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருக்கும் ஒரு கதையில் தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், அது விஜய்க்காக ரெடி பண்ணிய யோஹன் அத்தியாயம் கதையா? அல்லது சூர்யாவுக்காக ரெடி பண்ணிய துருவநட்சத்திரம் கதையா? என்பது தெரியவில்லை.
மேலும், ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருக்கும் கதையிலேயே விக்ரமை நடிக்க வைத்தாலும், அவரது பாணிக்கேற்ப கதையில் நிறைய மாற்றம் செய்யவும் கெளதம்மேனன் முடிவு செய்திருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இந்த படம் சூப்பர் ஹிட் ஆனால், நம்ம இந்த கதையில் நடிக்காம போய்டோமே, வட போச்சே..... என துடிக்கப்போவது சூர்யாவா? அல்லது விஜய்யா?
0 comments:
Post a Comment