இதன்போது நீதிமன்றத்தில் வைத்து அந்நபருக்கு குறித்த மத்தியஸ்தரின் மனைவி சிவப்பு அட்டை காட்டியுள்ளார்.
கடந்த யூன் மாதம் நடைபெற்ற போட்டியொன்றின் போது வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை காட்டியதால் அந்த மத்தியஸ்தரை மேற்படி வீரர் தாக்கினார். வீரரின் தாக்குதலால் குறித்த மத்தியஸ்தர் உயிரிழந்தார்.
44 வயதான ஜோன் பெய்னிஸ்விக்ஸ் எனும் கால்பந்தாட்ட மத்தியஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் அப்துல் அமீர் சாத் எனும் வீரருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த ஜோன் பெய்னிஸ்விக்ஸின் மனைவியான கிறிஸ் பெய்னிஸ்விக்ஸ், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றவாளியான வீரரை நோக்கி சிவப்பு அட்டை ஒன்றை உயர்த்திக் காட்டினார்.
இந்த பிளாஸ்டிக் அட்டையானது மத்தியஸ்தர் ஜோன் பெய்னிஸ்விக்ஸ் போட்டிகளின் போது பயன்படுத்திய ஓர் அட்டையாகும்.
அப்துல் அமீர் சிவப்பு அட்டை காட்டப்படுவதற்கு தகுதியானவர். அதனால் அதை நான் அவருக்கு காட்டினேன் என கிறிஸ் பெய்னிவிக்ஸ் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதேவேளை தனது நடவடிக்கைக்காக தான் வருந்துவதாகவும், தன்னால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தன்னை எப்போதாவது மன்னிப்பார்கள் எனக் கருதுவதாகவும் அப்துல் அமீர் சாத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment