பழ ஜீஸ், குளிர்பானங்கள், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை கிளப்பிவிடும்.
அதனால், கோடையில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
தேங்காய் எண்ணெய்
குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது.
ஏனெனில் இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது.
இவை உடலில் கொழுப்புச் செல்களாக சேராமல், உடைக்கப்பட்டு எனர்ஜிகளாக மாற்றப்படுகின்றன.
மேலும் இதில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும்.
ஐஸ் தண்ணீர்
ஐஸ் தண்ணீர் உடலில் உள்ள கலோரிகளை கரைத்து, நச்சுக்களை வெளியேற்றினாலும், உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதன்மையான ஒன்று.
ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
தர்பூசணி
கோடையில் அதிகம் விற்கப்படும் தர்பூசணியில் என்னதான் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும், இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடிய பழங்களில் ஒன்று.
ஆகவே தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியானது என்று தவறாக எண்ணி அதிகமாக அதனை சாப்பிட்டுவிடாதீர்கள். பின் உடல் சூடு பிடித்துக் கொள்ளும்.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் நியாசின் என்னும் வைட்டமின் பி3 அதிகம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை உயர்த்தும்.
இத்தகைய வேர்க்கடலை உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முக்கியமான ஒன்று. ஆகவே கோடையில் வேர்க்கடலை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கைக்குத்தல் அரிசி
சூடான உடல் கொண்டவர்கள், கைக்குத்தல் அரிசியை கோடைக்காலத்தில் உட்கொள்ள வேண்டாம். கைக்குத்தல் அரிசி எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதனை கோடையில் உட்கொள்வதை தவிர்த்திடுங்கள்.
ஏனென்றால், கைக்குத்தல் அரிசி உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியவை.
இஞ்சி
இது நல்ல காரசாரமான உணவுப் பொருள் என்பதால், இயற்கையாகவே இதற்கு உடலின் வெப்பநிலையை உயர்த்தும் குணம் உள்ளது.
எனவே கோடையில் இஞ்சியை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
0 comments:
Post a Comment