↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
காயம் காரணமாக, பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் முகமது இர்பான், உலக கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார். பாகிஸ்தான் அணியில் ஏழு அடி உயரம் கொண்டவர் முகமது இர்பான். இவரது பந்து வீச்சை எதிர்கொள்வதற்காக, இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி, ரஹானே போன்றோர், ஸ்டூல் மீது நின்று பந்து எறிய வைத்து வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டது, அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
மொத்தம் 5 லீக் போட்டிகளில் பந்து வீசிய இர்பான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக 30 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது, நடப்பு தொடரில், அவரது பெஸ்ட் ஆகும். அடி வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக திங்கள்கிழமை இவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில், அடி வயிற்று எலும்பு பகுதியில், முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதை உறுதி செய்ய இன்றும், ஒரு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதிலும், காயம் உறுதி செய்யப்பட்டது. பாகி்ஸதான் கிரிக்கெட் வாரியம் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் "உலக கோப்பை தொடரில் இர்பான் பங்கேற்க முடியாது. இருப்பினும், மாற்று வீரரை பாகிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு உடனடியாக அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆஸ்திரேலியாவுடனான காலிறுதி போட்டி முடிவுகளை வைத்து அதுகுறித்த முடிவு எட்டப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» உலக கோப்பையில் இருந்து வெளியேறுகிறார் பாகிஸ்தானின் 'உயர்ந்த மனிதர்'!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment