அமிதாப் பச்சன், இயக்குனர் பால்கி இருவரும் இணைந்த முதல் இரண்டு படங்களான ‘சீனி கம், பா’ ஆகிய படங்கள் வசூல் படங்களாகவும், விமர்சன ரீதியாக சிறந்த படங்களாகவும் விளங்கின.
ஆனால், இவர்களது கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்த ‘ஷமிதாப்’ படம் மாபெரும் தோல்விப் படமாகி விட்டது என பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் படங்களின் வசூலைச் சொல்லும் இணையதளங்கள் பலவற்றிலும் ‘ஷமிதாப்’ படத்தின் வசூல் வெறும் 27 கோடி ரூபாய் மட்டுமே ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், படத்திற்கான மொத்த தயாரிப்புச் செலவு மட்டுமே 40 கோடி ரூபாயாம்.
இந்தியாவில் 20 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 7 கோடி ரூபாயுமாக 27 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப் படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமத்தை விற்கும் போது மட்டும்தான் இன்னும் கூடுதல் தொகை அவர்களுக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.
அமிதாப் நடித்திருந்தாலும் படத்தைப் பார்க்க ஹிந்தி ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் இரண்டாவது ஹிந்திப் படமும், அக்ஷராவின் அறிமுகப்படமும் தோல்வியடைந்தது அவர்களுக்கு மிகப் பெரும் பின்னடைவுதான்.
சென்னையில் கூட படத்தை மீடியாக்களிடம் பெரிதும் விளம்பரப்படுத்த முயற்சித்தார்கள், அதனால் எந்த விதத்திலும் இங்கும் பயன் ஏற்படவில்லை.
0 comments:
Post a Comment