கடந்த இரண்டு வருடங்கள் சிம்புக்கு இருண்ட வருடங்கள் என்று தான் சொல்ல வேண்டும், ஹன்சிகாவுடன் காதல் முறிவு, அவர் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை, இதனால் மனமுடைந்த சிம்பு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். பிறகு வாலு, வேட்டை மன்னன், பாண்டியராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது அந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்து எடிட்ங், டப்பிங், கலர் கரக்ஷன் என அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டது, ஆனால் இன்னும் பாடல் மட்டும் ரெடியாகவில்லையாம். இதனால் கொந்தளித்த இயக்குனர் பாண்டியராஜ் சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மறைமுகமாக சிம்புவின் தம்பி, இது நம்ம ஆளு படத்தின் இசை அமைப்பாளருமான குரலரசனை பற்றி கிண்டலாக பேசினார். மூன்று மாதத்தில் ஒரு படத்தை முடித்து வெளியிட்டுவிடுவேன் இந்த முறை ஆறு மாதம் ஆகியும் வெளியாகவில்லை என வருத்ததுடன் தெரிவித்தார்.
பொங்கல் தினத்தன்று இது நம்ம ஆளு படத்தின் டீஸர் வெளியிடப்படும் என ஏற்கனவே சிம்பு தெரிவித்திருந்தார், அதன்படி டீஸர் கட் செய்யும் வேலைகள் முடிவடைந்துவிட்டது என்றும், டீஸர் தற்போது தயாரி நிலையில் இருக்கிறது, டீஸர் தமக்கு சந்தோஷத்தை தருகிறது என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.
இப்படிதான் போன பொங்கலுக்கு முன்பு வாலு படத்தின் டிரைலர் வெளியானது, படம் இன்னும் வெளிவந்தபாடில்லை. இந்த படமாவது அடுத்த பொங்கலுக்குள் வெளியாகுமா….??? இல்லை அடுத்த படத்தின் டிரைலர் தான் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment