கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள பெண் அவரது மகள் போன்றவர் என்று அவரின் மனைவி சுமலதா தெரிவித்துள்ளார். |
கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது. இத்தனை வயதான ஒருவர் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளாரே என்று சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து அம்பரீஷின் மனைவி சுமலதா கூறுகையில், அம்பரீஷ் முத்தம் கொடுத்த பெண்ணின் பெயர் வைபவி. அவர் நடிகர் ஜெய் ஜெகதீஷ் மற்றும் நடிகை விஜயலக்ஷ்மியின் மகள் ஆவார். அவர்கள் எங்கள் குடும்பத்து நண்பர்கள். அம்பரீஷ் வைபவியை மகளைப் போன்று பார்த்து வருகிறார். இந்த புகைப்படம் எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் தான் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதற்கும் சட்டசபையில் நடப்பவைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கையில் இதை வைத்து யார் இந்த பிரச்சனையை கிளப்பினார்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். |
கணவர் கொடுத்த முத்தம்: விளக்கம் அளிக்கிறார் அமைச்சரின் மனைவி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment