நடிகர் சிவாஜி கணேசனால் 1962ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்ட சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும்.
அந்த காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த அனைத்து படங்களும் இந்த தியேட்டரில் திரையிடப்பட்டன. சிவாஜி ரசிகர்களால் எப்போதும் சாந்தி தியேட்டர் நிரம்பியே இருந்தது.
2005ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட அந்த தியேட்டரில் ரஜினியின் சந்திரமுகி படம் இங்கு திரையிடப்பட்டு 888 நாட்கள் ஓடியது. சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டிலில் புதுப்பிக்கப்பட்டு இங்கு திரையிட்டனர். 50 நாட்கள் அப்படம் ஓடியது.
சென்னையில் ஏற்கெனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்கெயிட்டி உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.
இப்போது சாந்தி தியேட்டரும் வணிக வளாகமாகிறது. இந்த வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளது.
0 comments:
Post a Comment