↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களின் ஆவலைக் கிளப்பிய இரு படங்களின் அறிவிப்பு நேற்று வெளியானது. ஒன்று ஜேம்ஸ்பாண்டின் 24வது படம். அடுத்து அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கரின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ். ஆரம்பத்தில் டெர்மினேட்டரின் ஒரு போஸ்டரையும், டீசரையும் வெளியிட்ட படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும், நேற்று மாலையே படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுவிட்டனர். டெர்மினேட்டர் ஜெனிசிஸ் ட்ரைலர் வீடியோ வெளியான 12 மணி நேரங்களுக்குள் 3 மில்லியன் பேர் இந்த ட்ரைலரைப் பார்த்துள்ளனர்.
முந்தைய டெர்மினேட்டர்களில் அர்னால்டின் ஆதிக்கம் அதிகமிருக்கும். ஆனால் இந்த ட்ரைலரில் அவர் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இது முதல் ட்ரைலர்தான். அடுத்த ட்ரைலரில் பாருங்கள் என்று கூறியுள்ளார். எப்படி இருந்தாலும் இந்த முதல் ட்ரைலரே மிகுந்த ஆவலைக் கிளறியுள்ளது ரசிகர்களிடம். இதற்கு முந்தைய டெர்மினேட்டர்களை விட மிகச் சிறப்பாக இந்த 5-ம் பாகம் வந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.டெர்மினேட்டர் ஜெனிசிஸ் ட்ரைலர் வீடியோ

0 comments:
Post a Comment