லிங்கா படத்தை வேண்டுமென்றே மோசமாக விமர்சிக்கிறார்கள், தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த இணையதளங்கள் மீதும், நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் போலீஸில் புகார் தந்துள்ளார்.
இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு அதிகம் பாதிக்கப்பட்டது சினிமாக்காரர்கள். அவர்கள் எந்தப் படத்திலிருந்து கதையை, காட்சியை உருவினாலும் உடனடியாக அதனை ஆதாரத்துடன் நிரூபித்து அவர்களின் அறிவுஜீவி முகமூடியை கிழித்துவிடுகிறார்கள். அவர்களின் பில்டப் பேச்சுகளை கிண்டலடிப்பதுதான் பலரின் நிரந்தர பொழுதுபோக்கு.
லிங்கா படத்தை மட்டும் விடுவார்களா? பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள். அதை கட்டுப்படுத்ததான் போலீஸ் ஸ்டேசனுக்கு ஓடியிருக்கிறார்கள்.
யுஎஸ்ஸில் உயிரோடு இருக்கும் அதிபர் கொல்லப்பட்டால் என்னாகும் என்று படமெடுக்கிறான். இங்கே...?
0 comments:
Post a Comment