‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’ என்று தொடர்ந்து தனுஷ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தனுஷ் நடிப்பில் தன் முதல் படமான ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தை இயக்கினார். படம் ஏ,பி,சி என எல்லா ஏரியாவிலும் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது.
‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ரவி கிஷோர் விருப்பம் தெரிவித்தார். தனுஷ் நடித்த நாயகன் வேடத்தில் ராம் நடிப்பதாக முடிவானது. ஆனால் ராம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு தெலுங்கு படங்கள் முடிவடையாததினால் அவருடைய கால்ஷீட் தாமதமாகத்தான் கிடைக்கும் என்ற நிலை உருவானது. இந்நிலையில் மேலும் சில காரணங்களால் ‘வேலையில்லாப் பட்டதாரி’யை நேரடியாக தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் தனுஷ்.
தமிழில் வி.ஐ.பி. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இப்படத்திற்கு தெலுங்கில் ‘ரகுவரன் பி.டெக்.’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
ஆந்திராவிலும் வசூலை குவிக்க ரெடியாகிவிட்டான் இந்த வேலையில்லா பட்டதாரி
0 comments:
Post a Comment