டி.ஆரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் மற்றும் பாண்டியராஜ் அவர்களின் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஜோடி சேருவதால் பணத்தை அள்ளலாம் என்று கணக்கில் இருந்தார் பாண்டியராஜ்.
இப்போது அவருடைய கணக்கு வீன் போய்விட்டது, இது நம்ம ஆளு படமும் டிராப் ஆகிவிட்டது. ஆனால் இதுபற்றி சிம்பு தரப்பில் கேட்டால் அடுத்த மாதம் ரிலீஸ் என்று பொய் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.
ஒரு பக்கம் நயன்தாரா புது படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார், மறுபக்கம் இயக்குநர் பாண்டிராஜோ சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சிம்புவும் கையில் படங்கள் இல்லாததால் ஊதாறி தனமாக சுற்றி வருகிறார்.
இதையெல்லாம் பார்த்து இது நம்ம ஆளு படம் ட்ராப்பாகிவிட்டது, இனி அந்தப்படம் வரவே வராது என்ற பேச்சு படத்துறையில் மீண்டும் அடிபட தொடங்கிவிட்டது என தகவல்கள் வெளியாகின்றன.
0 comments:
Post a Comment