2014 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
2014 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தாண்டின் பெரிய நிகழ்வுகள், அதிக விருப்பங்கள் மற்றும் அதிகம் தேடப்பட்ட பட்டியல் இடம் பெற்றுள்ளன.
2014 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தை பாலிவுட் நடிகை சன்னி லியோன் பிடித்துள்ளார்.
அதிகம் தேடப்பட்ட இணையங்களில் IRCTC மற்றும் பளிப்கார்ட் இடம் பெற்றுள்ளன. இதே போன்று முக்கிய நிகழ்வுகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் ஃபிஃபா உலக கோப்பை 2014, இந்தியன் ப்ரீமியர் லீக் 2014 மற்றும் ஐபோன் இடம் பெற்றிருக்கின்றன. பாலிவுட்டை ஒப்பிடும் போது கிரிக்கெட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், சுனந்தா புஷ்கர் மரணம், மாயமாய் போன மலேசிய 370 விமானம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்திருப்பதாக கூகுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment