↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திருச்செங்கோடு பட்டறை மேட்டைச் சேர்ந்தவர் நசுமுதீன்முருகன்.
இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஈரோடு பஸ்டாண்டில் காத்திருந்தார். அப்பொழுது கையில் லிங்கா படத்தின் உறைபோட்ட கவர் ஒன்றை வைத்திருந்தார்.
அவரை நோக்கி வந்தவ 40 வயது தக்கவர் கையில் என்ன என்று விசாரித்திருக்கிறார். லிங்கா பட கேசட் என அவர் பதில் அளித்த நசுமுதீனிடம் அந்த சி.டி. யை வாங்கி நபர் எங்கே இதை வாங்கினீர்கள் என கேட்க, அதற்கு அவர் முன்னும் பின்னும் பதில் கூறியனார். கேட்டவர் போலிஸ்காரர் என்பதை உணர்ந்த நசுமுதீன் உடனே உண்மையை சொல்ல ஆரம்பித்தார்.
பஸ்சில் ஒருவர் வந்து கையில் சி.டி. பேக்கை வைத்துக்கொண்டு "லிங்கா ஒரிஜினில் வி.சி.டி" என விற்றதாகவும், அதனால் அதை ரூபாய் 100 க்கு வாங்கியதாகவும் ஒப்புக்கொண்டார். அந்த ஒரிஜினல் சி.டி.யை பெற்றுக்கொண்ட அந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அருகில் இருக்கும் DVD Shop க்கு சென்று, அதை போட்டு பார்த்தார்.
அதில் கவரில் மட்டும்தான் "லிங்கா ஒரிஜினல் CD" என எழுதியிருந்தது. உண்மையில் அந்த VCD ல் பழைய சிவாஜி கணேசனின் பாலும் பழமும் படம் இடம்பெற்றிருந்தது.
சி.டி. வாங்கிய நசுமுதீனை எச்சரிக்கை செய்துவிட்டு, இனிமேல் இதுபோன்ற திருட்டு விசிடிகளை வாங்க வேண்டாம் என்றும், அப்படி விற்றால் உடனே போலிசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் கூறி அவரை விடுவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment