காதலுக்கு கண்ணில்லை படத்தை இலங்கையை சேர்ந்த இந்து என்ற ஒரு நடிகை தயாரித்து வருகிறார். இவர் இப்படத்துக்கு திரைஅரங்கு புக் செய்யும் சிவா என்ற ஒரு நபரை நியமித்தார்.
அதன் பிறகு சில நாட்களில் சிவா இந்துக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் தொந்தரவு அதிகமாக அவரை கூப்பிட்டு கண்டித்தார் இந்து. அதோடு விடாமல் திடிரென்று ஒரு நாள் காரில் வலுக்கட்டாயமாக கட்டிபிடித்து முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத இந்து அவரை செருப்பால் விரட்டி அடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் சிவா பெயரில் புகார் அளித்துள்ளார்.
இதை தெரிந்த கொண்ட சிவா தமிழ்நாடு முழுவதும் புக் செய்த திரை அரங்குக்கு போன் செய்து காதலுக்கு கண்ணிலை படத்தை வெளியிட வேண்டாம், படம் சரியாக இல்லை என்ற சொல்லி தலைமறைவாகி விட்டாராம்.
தயாரிப்பு சங்கத்திலும், மீடியேட்டர் சங்கத்திலும் இதை பற்றி இந்து புகார் அளித்துள்ளார். ஆனால் இந்து தரப்பில் எந்த ஒரு செய்தியும் அதிகாரப்பூர்வமாக நிருபிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment