செய்தி-"ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ் நிறுவனம். இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் திரைப்படம் லிங்காதான் என்பது குறிப்பிடத்தக்கது."
ரஜினியின் ஆல் டைம் ரெக்கோட் படமான எந்திரன் 2010 அளவில் வெளிவந்து கிட்டத்தட்ட 100-130 கோடிகளுக்குள் வசூலித்தது. ஆனா இது தொடர்பாக 200+, 300+ கோடிகள் வசூலித்தன என்றெல்லாம் அப்போது கதை கட்டப்பட்டிருந்தன. அதுக்கு சாத்தியமே இல்ல, காரணம் எந்திரன் ஹிந்தியில் 12 கோடிகள்தான் வசூலிச்சது.. அப்பிடியிருக்கையில் மொத்த வசூல் 100-130 கோடிகளுக்குள் இருக்கவே அதிக சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. அதுகூட ரஜினி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த பெரு வெற்றியில்ல, ரஜினி+ஷங்கர் என்ற மாபெரும் கூட்டணிக்கு சன் நெட்வெர்க்கின் பிரமாண்ட புரமோஷன் துணையுடன் கிடைத்த வெற்றி என்பதே உண்மை. சிலர் நினைக்கலாம் ஷங்கர் என்ன ஷங்கர்? ரஜினி இல்லாவிடில் எந்திரன் பப்படமாகியிருக்கும் என்று, அவர்களுக்கு சின்ன உதாரணம் இன்றைய தேதியில் ஷங்கர், விக்ரம் என்ற மார்க்கட் இழந்த நடிகரை வைத்து எடுத்த "ஐ" படத்துக்கான எதிர்பார்ப்பு.. ஷங்கர் என்ற ஒரு மந்திரத்துக்காகவே இவ்வளவு எதிர்பார்ப்பு என்பதில் ஐயமில்ல..
அப்பிடி இருக்கையில் ரஜினியின் அடுத்த படமான லிங்காவை யாரை நம்பி 165 கோடி கொடுத்து வாங்குவார்கள்? ரஜினி இருக்கிறார் ஓகே.. ரவிக்குமார் என்ன ஷங்கரா? சொலிட் ஹிட் குடுக்க? இல்ல ரவிக்குமார் படங்கள் ஷங்கர் படங்கள்போல தமிழ் மக்களை தாண்டி முழு இந்திய மக்களையும் கவரக்கூடிய படமா? 165 கோடி கொடுத்து ஈரோஸ் வாங்கினா 200+ கோடிகள் வசூலிச்சால்தான் லிங்கா ஹிட்டே ஆகும், எல்லா தரப்பும் முதலுக்கு மோசமில்லா லாபமடைவார்கள். என்னவோ ஆளாளுக்கு மாறிமாறி ரீல் விடுங்கப்பா....
0 comments:
Post a Comment