உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் நரேந்திர மோடிக்கு 15 வது இடம் கிடைத்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான புதிய பட்டியலிலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்து தேசிய வாதி என மோடியைக் குறிப்பிட்டுள்ள அந்தப் பத்திரிகை, அவர் இந்தியாவின் புதிய ராக்ஸ்டாராக உள்ளார். ஆனால் பாலிவூட்டில் இருந்து வரவில்லை. தேர்தலில் பெருவெற்றியைப் பெற்று பிரதமராக பதவியேற்றுள்ளார் என அவரை போர்ப்ஸ் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.
இம்முறை பட்டியலில் மோடி உள்ளிட்ட 12 பேர் புதியவர்களே. கடந்த ஆண்டு பட்டியலில் 21 வது இடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெறவில்லை.
முதலாம் இடத்தை ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீனும், இரண்டாம் இடத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மூன்றாம் இடத்தை சீன அதிபர் ஜின்பிங்கும் பெற்றுள்ளனர். நான்காம் ஐந்தாம் இடங்களில் முறையே போப் பிரான்ஸிஸ், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலோ மோர்க்கல் ஆகியோர் பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment