↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
விராட் கோஹ்லியை லேசில் நினைத்துவிட வேண்டாம், உலக கோப்பை நாக்-அவுட் சுற்றுகளுக்கு மாறியுள்ள நிலையில், இனிதான், அவரின் ஆட்டத்தில் அனல் பறக்கப்போகிறது என்று கூறினார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரைன் லாரா.
இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாக வர்ணிக்கப்படுபவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், விராட் கோஹ்லி. தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், இலங்கையின் குமார் சங்ககாரா போன்றோருக்கு இணையாக மதிக்கப்படும் வீரர்.
ஆனால் நடப்பு உலக கோப்பைத் தொடரில், விராட் கோஹ்லி மிகப்பெரும் எழுச்சியை இன்னும் பெறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில், 107 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட கோஹ்லி, அதன்பிறகு ஆடிய 5 லீக் ஆட்டங்களிலும் ஒரு அரை சதம் கூட விளாசவில்லை. ஆனால், அவர் பேட்டிங்கில் தடுமாறவும் இல்லை. முப்பது, நாற்பது ரன்களை தடுமாற்றம் இல்லாமல் எடுக்கும் கோஹ்லி, அதன்பிறகு அதை பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தவறி வருகிறார்.
இதனிடையே பிரைன் லாரா அளித்துள்ள பேட்டி: விராட் கோஹ்லி, இன்னும் தனது திறனுக்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அவர் பெரிய ஆட்டக்காரர். முக்கியமான கட்டங்களில் கோஹ்லி பங்களிப்பு அபாரமாக இருக்கும்.
உலக கோப்பை தற்போது நாக்-அவுட் கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் கோஹ்லி, தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளதை பேட் செய்யும் விதத்தை வைத்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடிகிறது.
முதல் போட்டியில் அடித்த சதத்தால், கோஹ்லி சற்று ரிலாக்ஸ் ஆகியிருக்கலாம். ஆனால், அதேபோல அவர் தொடர்ந்து இருப்பார் என்று நான் கருதவில்லை. இத்தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் கோஹ்லி தனது முழுத்திறமையை காண்பிக்க உள்ளார் என்று நான் திட்டவட்டமாக நம்புகிறேன்.
தவானின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் ஒரு தன்னம்பிக்கை தென்படுகிறது. தொடக்க ஆட்டக்காரருக்கு அதுபோன்ற தைரியமும், தன்னம்பிக்கையும் அவசியமாகும். இவ்வாறு லாரா கூறினார்.
Home
»
kholi
»
sports
»
sports.tamil
» மெட்ராஸ்ல மாணிக்கமா இருந்த கோஹ்லி, இனி பாம்பே பாட்ஷாவா மாறப்போறாரு: சொல்கிறார் லாரா!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment