↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்து கடவுளான விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார்.
எந்த கோயில்களுக்கு சென்றாலும் அங்கு விநாயகரை முதல் கடவுளாக வைத்திருப்பார்கள், அதுமட்டுமா அனைத்து தெருக்களிலும் விநாயர் சிலையை வைத்து வணங்குவார்கள்.
விநாயகரிடம் வரம் வாங்குவது கஷ்டம், ஆனால் கொடுத்த வரத்தை திரும்பி வாங்கமாட்டார் என்பது ஐதீகம்.

விநாயகருக்கு திருமணம் ஆகிவிட்டது, திருமணம் ஆகவில்லை என்று இரு கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சிவபெருமான், பார்வதி தேவியின் இரண்டாவது புதல்வனான விநாயகருக்கு, பிரஜாபதி விஸ்வரூபனின் இரண்டு அழகிய புதல்விகளான ரித்தி மற்றும் சித்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தெய்வீக சிற்பியான விஸ்வகர்மா ஒரு அழகிய திருமண மண்டபத்தை வடிவமைத்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். விநாயகருடனான ரித்தி மற்றும் சித்தியின் திருமணத்தை சிவபெருமானும் பார்வதி தேவியும் கண்டு களித்தனர்.

விநாயகருக்கு ரித்தியின் மூலமாக லாபா என்ற மகனும், சித்தி மூலமாக சுபா என்ற மகனும் பிறந்தார்கள். இப்படி ஒரு கதையிருக்க, மற்றொரு கதையாக விநாயகருக்கு யானை தலை என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள எந்த பெண்ணும் ஒப்புக்கொள்ளவில்லை.

மற்ற அனைத்து கடவுள்களுக்கும் துணைவி இருந்த போது, தமக்கு மட்டும் இல்லையே என்பதால் அவருக்கு கோபம் ஏற்பட்டது. அதனால் தேவர்களின் திருமணங்களில் அவர் குழப்பங்களை ஏற்படுத்த தொடங்கினார். திருமண சடங்கின் ஒரு பகுதியாக தேவர்கள் மணப்பெண்ணின் வீட்டை நோக்கி செல்லும் பாதைகளில் எலிகளை விட்டு குழியை தோண்ட சொன்னார்.

இதனால் தேவர்கள் அனைவரும் தங்களின் திருமணத்தின் போது எண்ணிலடங்கா பிரச்சனைகளை சந்தித்தார்கள். விநாயகரின் நடவடிக்கைகளால் சோர்ந்து போன அவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு பிரம்மனிடம் முறையிட்டார்கள்.

அதனால் விநாயகரின் மனதை குளிர வைக்க ரித்தி (செல்வமும் வளமும்) மற்றும் சித்தி (அறிவும் ஆன்மீக சக்தியும்) என்ற இரு அழகிய பெண்களை பிரம்மன் உருவாக்கினார்.

விநாயகரை திருமண செய்து கொள்ள பிரம்மன் அவர்களை அனுப்பினார். அன்று முதல் விநாயகர் மனம் குளிரும் படி நடப்பவர்களுக்கு ரித்தி மற்றும் சித்தி அவர்களின் அருளும் கிடைக்கும் என்று இந்து புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top