9 வயது சிறுவன் ஒருவன் தண்டவாளத்தில் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்து நிறுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளான். |
கர்நாடக மாநிலம் தவாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த அவங்கிர் கிராமத்தில் வசித்து வரும் சித்தேஷ் என்ற சிறுவன் 4ம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன் காலை 6.30 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். பின்னர் தனது தந்தையிடம் அதனை தெரிவித்த போது, அவர் விளையாட்டாக கூறுகிறான் என்று அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது தந்தையை விடாப்பிடியாக அந்த இடத்திற்கு அழைத்துச்சென்ற சிறுவன், தனது சிகப்பு நிற சட்டையை கழற்றி ரயில் வரும் பக்கம் ஓடியுள்ளான். அப்போது, ஹீப்ளி-சித்ரதுர்கா பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. சிறுவன் சிகப்பு துணியை காட்டிக் கொண்டு ஓடி வருவதை கண்ட ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரயிலில் உள்ள பயணிகள் அச்சிறுவனை பாராட்டியுள்ளனர், மேலும் அச்சிறுவனுக்கு தைரிய விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வே பொறியாளர் ஒருவர் அவனது தைரியத்தை பாராட்டி ரூ.500 வழங்கியுள்ளார். |
தண்டவாளத்தில் விரிசல்: சிறுவனின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய பயணிகள்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment