அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 11வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து (‘ஏ’ பிரிவு), அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
அதே சமயம் ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து நடப்பு சம்பியன் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
வருகின்ற 18ம் திகதி சிட்னியில் நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா– இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான காலிறுறுதி ஆட்டம் குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரர் ஹசிம் அம்லா கூறுகையில், இலங்கை அணி மிகவும் அபாயகரமான அணியாகும்.
துடுப்பாட்டத்தில் சங்ககாராவும், பந்துவீச்சில் மலிங்காவும் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
சங்கக்காராவை முன் கூட்டியே ஆட்டம் இழக்க வைப்பது முக்கியமானது. எங்களது பந்துவீச்சாளர்கள் அவரை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்க செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இதேபோல மலிங்கா நேர்த்தியுடன் பந்து வீசக் கூடியவர். டெத் பவுலிங்கில் மிகவும் அபாரமாக வீசக்கூடிய உலகின் தலைசிறந்த பவுலர் ஆவார்.
அவரது பந்துவீச்சில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு அதிகமாக இருப்பது அதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment