↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்திய கிரிக்கெட் என்றால் சச்சின்தான் என்ற அந்த மாயையை புறம் தள்ளியுள்ளார் டோணி.. முழுக்க முழுக்க தனது திறமையால். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் ஏற்படுத்திய தாக்கத்தை விட டோணியின் தாக்கம்தான் மிகச் சிறந்ததாக உருவெடுத்துள்ளது. 

எதிரணிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது, நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் மீண்டு வருவது, கடைசி நேரத்தில் அருமைாயன வெற்றிக்கு அணியைக் கொண்டு செல்லத் தவறாதது, சிறந்த பினிஷராக விளங்குவது, நல்ல கேப்டனாக அணியை வழி நடத்துவது என அனைத்து வகையிலும் சச்சினை ஓரம் கட்டி விட்டார் டோணி.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு ஒரு நாள் போட்டிகளில் முழுக் கவனமும் செலுத்தி வருகிறார் டோணி. அது தற்போது உலகக் கோப்பைப் போட்டிகளில் சூப்பராக எதிரொலித்துள்ளது. மேலும் மேலும் பலமானவராக மாறி நிற்கிறார் டோணி. கிட்டத்தட்ட விஸ்வரூபம் என்று கூட சொல்லலாம்.

நேரடியாக உலகக் கோப்பையில் 10 வெற்றிகளைப் பெற்று கிளைவ் லாயிடின் சாதனையை தாண்டியுள்ளார் டோணி. இந்த வகையில் சாதனையை கையில் வைத்திருப்பவர் ரிக்கி பான்டிங்தான். அவர் தொடர்ந்து 24 வெற்றிகளை உலகக் கோப்பையில் பெற்றவர் ஆவார்.

பான்டிங்கும் சரி, லாயிடும் சரி கேப்டன்களாக தங்களது அணிக்கு பல சிறப்புகளைத் தேடிக் கொடுத்தவர்கள் ஆவர். டோணியும் அவர்களைப் போல திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தனி ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அவர் இந்திய அணிக்கு பல பெருமைகளைத் தேடிக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக சேஸிங்கில் டோணியின் சராசரி மிரள வைக்கிறது. அவரது சேஸிங் பேட்டிங் சராசரி 109.19 ஆகும். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் பேவன் 2வது இடத்தில் இருக்கிறார்.

மேலும் ஒரு நாள் போட்டிகளில் கடைசி 40-50 ஓவர்களில் மட்டும் இவர் எடுத்த ரன்கள் 3000 ஆகும். கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட ரன் குவிக்கும் ஒரே வீரர் டோணிதான் என்று சொல்லலாம்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அவர் சிறப்பாக ஆடி 85 ரன்களைக் குவித்ததைச் சொல்லலாம். அவரது உத்வேகத்தால் சுரேஷ் ரெய்னாவும் சிறப்பாக ஆடி சதம் போட்டார். 5வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 196 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமலும் இருந்தனர்.

டோணியின் திறமை, அருமை கிரிக்கெட் உலகுக்குப் புதிதல்ல. அவரைப் புகழாத உலகளாவிய கிரிக்கெட் வீரர்களே இல்லை. டோணியின் திறமைகளை நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் வெகுவாகப் புகழந்து்ார். புயலே வீசினாலும் அமைதியாக அதை எதிர்கொள்ளும் டோணிக்கு இணை அவர்தான் என்று ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

ஸ்டைரிஸ் கூறுகையில், டோணியைப் போல நெருக்கடியா சரியாக கையாளுவது வேறு யாருமே இல்லை. அவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது நிறைய உள்ளது. மிகவும் அமைதியாக அவரால் எப்படி இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. போட்டிகளின்போது நடு நடுவே அவர் ஆலோசனை கூறுவார். ஒரு பந்தில் தவறு செய்தால், அடுத்த பந்தில் அதை சரி செய்யக் கூறுவார். உங்களது வேலை என்ன என்பதை தெளிவாக விளக்கி விடுவார். இதெல்லாம் அசாத்தியமானது, அபாரமானது என்றார் ஸ்டைரிஸ்.

கவாஸ்கரும் கூட டோணியைப் புகழாத நாளே இல்லை. கேப்டன் சூப்பர் டூப்பர் டோணி என்றுதான் அவரை பெரும்பாலும் அழைக்கிறார் கவாஸ்கர்.

ஒரு நாள் போட்டிகளுக்கு இந்தியாவுக்குக் கிடைத்த கேப்டன்களிலேயே மிகவும் சிறந்த, வெற்றிகரமான கேப்டன் டோணி என்பதில் சந்தேகமே இல்லை... சச்சினை விட ஒரு படி உயர்ந்தவர் என்று கூட தாராளமாக சொல்லலாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top