டோனி
கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பும் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, கால்பந்து விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர்.
பயிற்சிகளின்போது கால்பந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டவர். 2011ம் ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான உலகக்கிண்ணத்தை வென்ற தருணத்தில், அன்று நடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் கடைசி ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்பதை வருத்தமாக பேட்டியில் குறிப்பிட்டார்.
கால்பந்து விளையாட்டினை தவிர டோனிக்கு அதிவேக பைக்குகளை ஓட்டுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. ஜார்கண்டில் இருக்கும் இவரது வீட்டில் வெளிநாட்டு பைக்குகள் அணிவகுத்து நிற்கும்.
ஷிகர் தவான்
மீசையை முறுக்கி விட்டு முரட்டு மனிதராக காட்சியளிக்கும் தவானுக்கு இரும்பு குதிரைகள் போன்ற 1000 சி.சி.திறன் கொண்ட பைக்குகளை இயக்குவது அலாதியான பொழுதுபோக்கு.
கம்பீரமான ஒலி எழுப்பும் பைக்குகளை நகரில் ஓட்டி மகிழ்கிறார். பைக்குகளை இயக்குவதுடன் மட்டுமில்லாது சிறு சிறு பழுதுகளையும் சரி செய்யும் அனுபவம் பெற்றவர்.
வலைப்பயிற்சிகள், உள்ளூர் போட்டிகள் என சகல நிகழ்வுகளுக்கும் கலர் கலரான இரும்பு குதிரைகளில் வந்திறங்குவார். இவரின் இரும்பு குதிரைகளை டோனியும் ஓட்டி மகிழ்ந்துள்ளார்.
ஜடேஜா
இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரராக திகழும் ஜடேஜாவின் பொழுதுபோக்கு 'கவ் பாய்' தோரணையில் குதிரையில் வலம் வருவது.
இளமை பருவத்திலிருந்தே குதிரைகள் மீது அதிக நேசம் கொண்ட ஜடேஜா, தனது பண்ணை வீட்டில் இரண்டு உயர் ரக குதிரைகளை வளர்த்து வருகிறார். கேசர், தன்ராஜ் என செல்லமாக அழைக்கும் அவைகளுடன் வேகமாக பயணிப்பது இவரின் பொழுதுபோக்கு.
விராட் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவர் மற்றும் கோபக்கார வீரர் விராட் கோஹ்லிக்கு ஷாப்பிங் செய்வது அதிகமாக பிடிக்கும்.
உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சமயங்களில் அந்தந்த இடங்களில் பிரபலமானவைகளை வாங்கி குவித்து விடுவார். போட்டிகள் இல்லாத தருணங்களில் உடற்பயிற்சி கூடங்களில் தனது பொழுதினை செலவு செய்வார்.
0 comments:
Post a Comment