தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் அணி திரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் உரிமை முழக்கத்துடன் ஒன்று கூடியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை கட்டி இழுத்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், “ we want tamil eealam” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.
ஐ.நா முன்றலில் கூட்டம் நடைபெறும் போது பாதுகாப்பு சாதாரணமாக இருப்பது வழமை. இம்முறை வழமைக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததுடன், ஜெனிவா காவல்துறையினர் அதி உச்ச பாதுகாப்பு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஊர்வலம் ஆரம்பமான இடத்திலிருந்து கூட்டம் நடைபெறவிருந்த இடம் வரை காவல் துறையினரின் வாகனம் பாதுகாப்பு வழங்கியதுடன், வீதியின் இரு மருங்கிலும் பொலிசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா பிரதான நுழைவாயிலின் முன்னால் சிவப்பு, வெள்ளை நிற கயிறுகளால் மறிக்கப்பட்டதுடன் முன்பக்கமும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment