அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி உலக வர்த்தக மைய கட்டடமான இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதையடுத்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தது.
அமெரிக்காவில் சிலர், 9/11 தாக்குதல் அல்-கெய்தாவினால் மட்டும்தான் நிகழ்த்தப்பட்டதா? அல்லது வேறு யாருடைய கைவரிசையும் உண்டா? என்னும் சந்தேகத்தினை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்த காலகட்டத்தில் பலரும் இந்த தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று கூறியதோடு அதுபற்றி ஆவணப்படங்கள் எடுத்தும் பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள் எழுப்பிய சந்தேகங்களில் சிலவற்றை பார்ப்போம்.
பெண்டகனில் மோதியதாகச் சொல்லப்படும் விமானம் (போயிங் 757) நிஜமாகவே மோதியிருந்தால் அது ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் துளையைவிடப் பெரிதான ஒரு துளையை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
எனவே இந்தத் துளை/சேதம் வேறுவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படியானால் அந்த விமானத்துக்கு என்ன நடந்தது? அதில் இருந்தவர்கள் என்னவானார்கள்? பெண்டகன் அருகில் போயிங் விமானத்தின் எந்த பாகங்களுமே கிடைக்கவில்லையாமே?
விமானம் மோதினால் அதில் உள்ள எரிபொருள் பற்றி எரியும்போது அருகில் இருக்கும் எதுவுமே பிழைக்காது. ஆனால் அரசு வெளியிட்ட படங்களைக் கூர்ந்து கவனித்தால் அருகில் ஒரு மேஜை, நாற்காலி, அதன்மேல் திறந்தபடி இருக்கும் புத்தகம் என்று பலவும் எரியாமல் உள்ளன.
விமானத்தின் கறுப்புப்பெட்டி கூட எரிந்து காற்றோடு காற்றாகிப் போனதாகச் சொல்லும் நிர்வாகம், உடல்கள் அனைத்தும் கிடைத்தன என்றும் அவற்றின் அடையாளங்கள் காணப்பட்டு ஒவ்வொருவரும் யார் யார் என்று கண்டறியப்பட்டனர் என்றும் சொல்கிறார்களே, அது எப்படி?
உலக வர்த்தக மையக் கட்டடம் விமானங்கள் மோதியதால் சிதறி விழுந்ததா அல்லது வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதா?
உலக வர்த்தக மையக் கட்டடம் விழுந்தபின்னர் அங்குள்ள தடயங்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டதற்குக் காரணமென்ன?
சம்பவம் நடக்கப்போகும் நாள் முன்கூட்டியே புஷ் அரசுக்குத் தெரியுமா? அன்று ஏதோ காரணங்களால் அமெரிக்கப் போர் விமானங்கள் பலவும் அலாஸ்கா, கனடா வான்வெளியில் போர்ப்பயிற்சிக்கென அகற்றப்பட்டதாகவும், இருக்கும் விமானங்களும் கடத்தப்பட்ட விமானங்களைத் தாக்காவண்ணம் குழப்பமளிக்கும் தகவல்கள் தரப்பட்டதாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன.
இவ்வாறு பல கேள்விகள் எழுந்த நிலையில், 2004ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதைப் பற்றிய ”ஃபாரன்ஹீட் 9/11” என்ற ஆவணப் படம் திரையிடப்பட்டது.
இதுவரையிலும் வெளியான உலக ஆவணப் படங்களிலேயே அதிகம் சம்பாதித்திருப்பது இந்தப் படம்தான் என்று கூறப்படுகிறது.
அந்த ஆவணப்படத்தில், சுமார் 3,000 பேரை பலிகொண்ட அந்தத் தாக்குதல் நடந்தபோது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு நர்சரிப் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து குழந்தைகளின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் நெருங்கி வந்து, இரண்டாவதாக ஒரு விமானம் மோதியிருக்கிறது, தேசம் ஆபத்தில் இருக்கிறது என்கிறார். அப்போதும் புஷ், குழந்தைகளின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் அந்த படத்தில், குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ் காலத்தில் இருந்து இவர் காலம் வரை, இவர்களுக்கும் சவுதி மன்னர்களுக்கும், குறிப்பாக பின்லேடன் குடும்பத்துக்கும் உள்ள வர்த்தக உறவு துல்லியமான ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது.
செப். 11 தாக்குதலுக்குப் பிறகு, செப் 13-ம் திகதியன்று 142 சவுதிகள் அமெரிக்காவில் இருந்து ஆறு விமானங்களில் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 24 பேர் பின்லேடன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் ஆவணப்படத்தின் இயக்குனர் மூர்.
அப்படியானால் அவர்களை அனுப்பி வைத்தது யார்? இத்தனைக்கும் தாக்குதல் நடத்த உடனேயே அல்-கொய்தா உரிமை கோரிவிட்டது. அதன்பிறகும் பின்லேடன் உறவினர்களை அனுப்பி வைத்தது ஏன்?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற விடையில்லா கேள்விகளுடன் வெளியான இந்த ஆவணப் படம், வெளியானபோது பல அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
|
9/11 தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா... பின்னணி என்ன? தொடரும் சந்தேகங்கள் (வீடியோ இணைப்பு)
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment