மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு பிரதமர் மோடி தனது கைப்பட எழுதிய நன்றி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். |
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாவ்யா ஆவ்தி என்ற 6 வயது சிறுவன் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஏழைக் குழந்தைகள் சிலரை பார்த்துள்ளான். அப்போது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என பாவ்யாவின் மனதில் எண்ணம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த சிறுவன், அவனது தாத்தாவின் உதவியுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி, அதனுடன் தான் சேமித்து வைத்திருந்த ரூ.107-யையும், பிரதமரின் ஏழைக் குழந்தைகள் நலவாழ்வு திட்டத்திற்காக அனுப்பி வைத்துள்ளான். இந்நிலையில், அந்த கடிதத்தை ஏற்று கொண்ட பிரதமர் மோடி, கடிதத்தை பெற்றுக் கொண்டதாகவும், நிதி அளித்ததற்கு நன்றி எனவும் குறிப்பிட்டு தனது கைப்பட எழுதிய கடிதத்தை பாவ்யாவுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அந்த நன்றி கடிதத்தை பெற்ற சிறுவன் பிரதமரின் கடிதம் எதிர்பாராத பிறந்தநாள் பரிசு என தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய நன்றி கடிதம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.