↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணியின் கோப்டன் டோணி மகிழ்ச்சியாக இல்லை. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல் 6 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அடுத்த 2 போட்டிகள் நியூசிலாந்தில் நடந்தது. 6 போட்டிகளில் வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணியின் கேப்டன் டோணி மகிழ்ச்சியாக இல்லை.
இந்திய அணி கடந்த 7ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து மெல்போர்ன் சென்று அங்கிருந்து விமானம் மூலம் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை நள்ளிரவில் அடைந்தது. ஆக்லாந்தில் இருந்து பேருந்தில் அரை மணிநேரம் பயணம் செய்து ஹாமில்டன் நகரை அடைந்தது. ஹாமில்டன் நகரில் தான் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்திற்கு பயணம் செய்து வந்ததால் அணியினர் சோர்வு அடைந்துவிட்டனர் என்பது தான் டோணியின் கவலை. இதனால் அவர் 6 போட்டிகளில் வெற்றி பெற்றும் மகிழ்ச்சியாக இல்லை.
இந்திய அணி வரும் 16ம் தேதி நியூசிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகருக்கு விமானத்தில் செல்கிறது. வரும் 19ம் தேதி மெல்போர்ன் நகரில் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
நாங்கள் நியூசிலாந்துக்கு வந்த பயண திட்டம் சரியில்லை. நாங்கள் நள்ளிரவில் நியூசிலாந்துக்கு வந்தோம். ஆக்லாந்தில் இருந்து பேருந்தில் வேறு பயணம் செய்து ஹாமில்டன் சென்றோம். வீரர்களின் தூங்கும் நேரம் பாதிக்கப்பட்டது என்று டோணி தெரிவித்தார்.
காலிறுதிப் போட்டி நடக்கும் இடம், மற்றும் எதிரணி யார் என்று தெரிந்துவிட்டதால் மகிழ்ச்சியா என்று டோணியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், காலிறுதிப் போட்டியில் எதிரணியினர் பற்றி எதுவும் இல்லை. அனைத்து எதிரணியினரின் தரமும் ஒரே மாதிரி தான் இருக்கும். நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அவ்வாறு கிடைத்தால் எங்கள் வீரர்கள் அடுத்த போட்டிக்கு முன்பாக நன்றாக ஓய்வு எடுக்க முடியும் என்றார் டோணி.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
»
worldcup
» விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றும் டோணி சந்தோஷமா இல்லையே....!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment