கடந்த 15ம் திகதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கிண்ண போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் மெல்பர்ன் நகருக்கு திரும்பும் வகையில் இந்திய வீரர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மெல்பர்னில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக திங்கட்கிழமையன்று காலை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இந்திய வீரர்கள் அடிலெய்ட் விமான நிலையத்துக்கு வந்துவிட்டனர்.
பின்னர் இந்திய வீரர்களும் வரிசையாக நிறுத்தி பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்போது டோனி தனது உடமைகளை, பரிசோதனை எந்திரத்துக்கு அனுப்பப்படும் டிரேயில் வைத்து விட்டு, பின்னர் மெட்டர் டிடெக்டர் வழியாக அதனை எடுக்க சென்றார்.
அந்த சமயம் அவர் டிடெக்டரை கடந்த போது அது சத்தம் எழுப்பியதால் அவரை அவுஸ்திரேலிய அதிகாரிகள் அழைத்து சோதனையிட்டனர். அவரது கால்சட்டை பாக்கெட்டை பரிசோதித்தனர். ஆனால் அவரிடம் ஒன்றுமில்லை.
இதனைத் தொடர்ந்து மெட்டர் டிடெக்டர் வழியாக அவர் மீண்டும் சென்ற போது அது மீண்டும் ஒலி எழுப்பியது.
இதனையடுத்து அதிகாரிகள் இந்த முறை டோனியின் காலணியை கழற்றி அதனை பரிசோதிக்கும் போது அதில் சிறிய அளவிலான இரும்பு பொருள் இருந்தது.
இதுவே மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்ப காரணமாக இருந்தது அறியப்பட்டது.
இதே போல் இந்திய அணியின் மேலாளர் ரவி சாஸ்திரி அணிந்திருந்த கவ்பாய் தொப்பியில் மெட்டல் இருந்த காரணத்தினால், அவரையும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இரு முறை பரிசோதித்தனர்.
0 comments:
Post a Comment