SBB எனப்படும் சுவிட்சர்லாந்து மத்திய ரயில்வே நிறுவனத்தின் இந்த திட்டத்தின் கீழ் புதிய பதவிகளை உருவாக்குவதுடன், தற்போதுள்ள பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லீ மெய்யர் (Lea Meyer), தற்பொழுது 80 முதல் 100 சதவிகிதம் வரை பல வேலைவாய்ப்புகள் இருந்தாலும் கூட இதை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே நிறுவனத்தில் உள்ள 30,000 பணியாளர்களில் 17 சதவிகித்தினர் பகுதி நேர பணியாளர்களாகவும் அவர்களில் பெண் பணியாளர்களே அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பணிபுரியும் பகுதி நேர பணியாளர்களில் 50 சதவிகிதத்தினர் பெண்கள் என்றும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே ஆண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலம் அதிக அளவு பெண்களை ஈர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெர்னில் உள்ள ரயில்வே துறையின் புதிய தலைமை அலுவலகத்தில், நன்கு படித்த பெண்களுக்கு இந்த புதிய பகுதிநேர வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையின் இந்த புதிய திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பகுதி்நேர வேலை வாய்ப்பு வல்லுநர் ஜுர்க் வைலர் (Jürg Wiler), இது ஒரு துணிச்சலான திட்டமாக இருந்தாலும் நல்ல பயனளிக்க கூடியது என்றார்.
மேலும், சுவிஸில் தற்பொழுதுள்ள நிலையில், முழுநேர வேலை வாய்ப்பை நாடிச் செல்வதே வழக்கமாக உள்ளது என்றும் அந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
முழு நேர வேலையை விட பகுதி நேர வேலைகளில் தான் திறம்பட பணியாற்ற முடியும் என்றும், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்க முடியும் எனவும் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
SGV-USAM என்ற தொழிலாளர்கள் அமைப்பின் இயக்குனரான Hans-Ulrich Bigler கூறுகையில், பகுதநேர வேலை வாய்ப்பை அதிகரித்தால், அது ஒட்டுமொத்த பணியாளர்களை ஒருங்கிணைக்க கடினமாக இருக்கும் என்றும் இதனால் ஏற்படும் செலவுகள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தவேண்டிய நிலை வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் இந்த புதிய திட்டம் ரயில்வே நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த செயல்பாடுகளை பாதிக்காத அளவில் நடவடிக்கைகள் எடுப்போம் என Hans-Ulrich Bigler தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment