தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல் போட்டவர்கள் யாரும் சோடை போனதாக சரித்திரம் இல்லை. இன்று ஒருவன் சினிமாவில் நடிகக் வேண்டும் என்றால், அவனுடைய தந்தை திரையுலகில் இருந்தால் போதும். ஆனால், எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தன் சொந்த காலை ஊனி வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
சாதரண குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங், எம்.பி.ஏ என பட்டப்படிப்புகளை படித்து வேலைக்கு செல்வார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தன் குரலை எடுத்து கொண்டு பிரபல தொலைக்காட்சி வாசலில் வந்து நின்றார். அன்று இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று அவரை சுற்றியுள்ளவர்கள் பலரும் பேசியிருப்பார்கள்.
ஆனால், திறமை திறமை திறமை இதை மட்டுமே நம்பி ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தன் வாழ்க்கையை புதிய வழியில் தொடங்கிய சிவா, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல பேரின் வாய்ஸை பேசி அனைவரையும் கவர்ந்தார். தற்போது அவர் பேசிய குரல்களே அவரை அழைத்து பாரட்டுகிறது.
தொலைக்காட்சி தொகுப்பாளாராக தன் வாழ்க்கையை தொடங்கிய சிவா அதன் பின் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் சின்ன ரோலில் நடித்தார். வணக்கம் வாழ வைக்கும் சென்னை இவரை மட்டும் விரட்டிய விடும்? மெரினா உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை, ஆனால், இவர் அடித்த எதிர் நீச்சலில் வெற்றி வீடு தேடி வந்தது.
இவர் என்ன தான் வீட்டிற்கு அடங்காமல் வருத்தப்படாத வாலிபராக நடித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கிறது, அதே நேரத்தில் மான் கராத்தே போட்டு பயந்து ஓடினாலும் பிடிக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் பழகிய முகம் பக்கத்து வீட்டு பயன் தோற்றம் என அனைவரையும் கவர்ந்து இழுத்தார், குறிப்பாக பெண்கள் மற்றும் குட்டிஸ்களின் இன்றைய பேவரட் சிவகார்த்திகேயன் தான். இவரின் தொடர் வெற்றி பயணத்தில் எந்த ஒரு புள்ளியும் விழாமல் கமாவாக தொடர வேண்டும். Happy Birthday சிவகார்த்திகேயன்.
0 comments:
Post a Comment