லிங்கா விவகாரத்திற்கு அதிகம் முன்னுரை தேவையில்லை. இந்த பிரச்சனையில் தொடர்ந்து போராடிவரும் சிங்காரவேலன், சினிமா பிரச்சனையில் அரசியல் வாதிகள் வந்தது ஏன் என்ற கேள்விக்கு சுட சுட ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் சூடு குறைவதற்குள் இவருக்கும் திமுக வுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. இவருக்கு எப்படி அதிமுக தலைமையிலான அரசு உதவ முன் வரும் என்ற கேள்வியும் எழுப்பி வருகிறார்கள் இங்கே. அதற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு இந்த பிரச்னையைக்கொண்டு செல்ல தலைகீழாக நிற்கிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர். ”எங்களுக்கு ஆசி தாருங்கள் அம்மா” என்று புலம்பலுடன் ஒரு போஸ்டர் அடித்திருக்கிறார்கள். ”கடந்த காலங்களில் சினிமாவை ஆட்டுவித்த அதிகார மையங்களை ஓட்டமெடுக்க வைத்த மகா சக்தியே” என்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
திமுக தலைவர் மு.கருணாநிதி குடும்பத்தினரைப் பற்றிய வாசகங்கள் அவை. ஆனால் இதையெல்லாம் கூறும் சிங்காரவேலன் யார் தெரியுமா? திமுக சார்பில் கடந்த சட்டசபைத்தேர்தலில் போட்டியிட மனு செய்து, அது கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டவர். அப்போதைய பத்திரிகை பேட்டி ஒன்றிலேயே, ”தளபதியே அடுத்த முதல்வர். உலகமெங்கும் குடும்ப ஆதிக்கம் ஓங்கியிருக்கும் போது திமுகவை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்? அம்மையார் ஆட்சியில் அவருக்கு எவ்வித ரத்த பந்தங்களும் இல்லாதவர்கள் மண்டலவாரியாக ஆளுமை செலுத்தினார்களே, அதற்கு என்ன பெயர் என்று அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று மக்கள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா குறித்து ஏக வசனத்தில் பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார். (தொடர்புடைய முந்தைய செய்தி : http://www.seythigal.com/?p=5665)
”அப்படிப்பட்டவர் இப்போது திடீரென ஸ்டண்ட் அடித்து காலில் விழுந்தால் ‘அம்மா’வுக்குத் தெரியாதா என்ன? இவர்களின் கோரிக்கையில் துளிக்கூட நியாயம் இல்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரியும். அதனால் தான் ஆரம்பத்தில் படு வேகமாக இந்தப் பிரச்னையில் களமிறங்கிய வேல்முருகன் உள்ளிட்டவர்கள்கூட அதன் பிறகு வாயே திறக்காமல் அடங்கிவிட்டார்கள். எனவே தான் இப்போது வேறு யாரைக்கூப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத சிங்காரவேலன் தரப்பிற்கு ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த விநியோகஸ்தர் ஒருவர்.
ஏற்கனவே நடிகர் சங்கம் இந்தப் பிரச்னையில் சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இப்போது தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகின் அனைத்து சங்கங்களும் இணைந்து சிங்காரவேலன் தரப்பிற்கு இனிமேல் எந்தவொரு திரைப்படமும் விநியோகத்திற்கு வழங்கக்கூடாது. அதே போல திரைத்துறையில் அவர்கள் தரப்பு எந்த வகையில் ஈடுபட்டாலும் அதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றதொரு தீர்மானத்தை போடவிருப்பதாக செவிவழிச் செய்தி!
இதற்கிடையில் சிங்காரவேலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தை நடுவில் இரண்டு வாரங்கள் திறந்து வைத்து விட்டு, இப்போது மீண்டும் மூடி விட்டார்.
நன்றி- http://www.seythigal.com/
0 comments:
Post a Comment