ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து 36.2 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 143 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி திணற ஆரம்பித்தது.
7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி நேரத்தில் போராடி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் திணறல் குறித்து அணித்தலைவர் மெக்குல்லம் கூறுகையில், முதலில் பந்து வீச முடிவெடுத்த போது, அதற்கு வலு சேர்க்கும் வகையில் பந்து வீச்சாளர்களின் செயல்பாடு அமைந்தது பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் எளிதில் கணிக்க முடியாத இந்த ஆடுகளத்தில் ஸ்காட்லாந்து இவ்வளவு ஓட்டங்கள் எடுத்ததையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
எங்களது பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு உண்மையிலேயே அபாரமாக இருந்தது. ஆனால் துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
அடுத்து இங்கிலாந்தை வெலிங்டனில் (பெப்ரவரி 20) சந்திக்க இருக்கிறோம். இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும். இதில் இதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment